திருப்பி அடிக்கும் உக்ரைன்.. ரஷ்யாவுக்கு பின்னடைவு? <!– திருப்பி அடிக்கும் உக்ரைன்.. ரஷ்யாவுக்கு பின்னடைவு? –>

தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகளுக்கு, உக்ரைனிய படையின் கடுமையான எதிர்ப்பால் யுத்தத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரஷ்யா கூடுதலாக படைகளை அனுப்ப முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

உக்ரைனை கைப்பற்றும் நோக்கிலும், அது நேட்டோ படையில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமையில் இருந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைனிய படைகளும் கடுமையான பதிலடி கொடுப்பதாக சொல்லப்படுகிறது. இது, உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என நினைத்த புதினின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் உள்ளது எனக் கூறப்படுகிறது. உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படைகள் வலுவான பதிலடியை சந்தித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமையன்று உக்ரைன் தலைவர் கிவ்வை கைப்பற்ற நினைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள், உக்ரைன் படையால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்து 50ஆயிரம் வீரர்களை நிலைநிறுத்தியிருந்தாக கூறப்பட்ட நிலையில், அதில் 50சதவீதம் அதாவது 75ஆயிரம் வீரர்கள் உக்ரைனுக்குள் போர்க்களத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் படையின் கடுமையான பதிலடியால் ரஷ்ய படை விரக்தியடைந்துள்ளது எனவும், அவர்களால் திட்டமிட்டபடி முன்னேறிச் செல்ல இயலவில்லை எனவும் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக பெண்டகன் கூறியுள்ளது. ரஷ்ய படை எதிர்பார்க்காத ஒரு பதிலடியை சந்தித்து வருவதாகவும், இந்த பின்னடைவை சந்திக்க வரும் நாட்களில் ரஷ்யா மேலும் துருப்புகளை போரில் களமிறக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

போரில் ரஷ்யாவின் கை ஓங்கியிருந்தாலும் கூட, உக்ரைன் படையின் எதிர்ப்பும், பலமும் வியக்கத்தக்க வகையில் உள்ளது என பெலாரஸ் நாட்டுக்கான இங்கிலாந்து தூதரும், சர்வதேச Strategic நிறுவனத்தைச் சேர்ந்தவருமான Nigel Gould-Davies தெரிவித்திருக்கிறார். ரஷ்ய படைகளால் தங்களது ராணுவ சக்தியை முழு பலத்துடன் பிரயோகிக்க முடியவில்லை எனவும், அதனை உக்ரைன் படைகள் முறியடித்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

ஒரு புறம் ரஷ்ய ராணுவம் உயிர் சேதத்தை சந்தித்து, போர் ஆயுதங்களை இழந்தாலும், உக்ரைன் தரப்பிலும் கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. உக்ரைனின் தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் அந்நாட்டு படைகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போரில் உக்ரைனின் எதிர்ப்பு குறைந்த அளவே இருக்கக் கூடும் என ரஷ்யாவின் கணிப்பு தவறான கணிப்பு எனவும், ரஷ்ய துருப்புகள் மெதுவாகவே முன்னேறி வருகின்றன எனவும் உளவுத்துறை நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக உக்ரைனின் வடக்குப் பகுதியில் ரஷ்ய படைகளுக்கு கிடைத்த பதிலடியால், அவர்கள் வேகமின்றி மெதுவாகவே முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.