தேசிய அளவிலான கார்பந்தயம்: சென்னை வீரர் முதலிடம்

கோவை,
கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் தேசிய அளவிலான கார்பந்தயம் 2 நாட்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, அசாம், டெல்லி, கர்நாடகா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40 வீரர்கள் கலந்து கொண்டனர். நேற்று முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று 2-ம் சுற்று போட்டிகள் நடந்தன. போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மின்னல் வேகத்தில் கார்களை இயக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இன்று நடைபெற்ற எல்.பி.ஜி. பார்முலா 4 பந்தயத்தில் சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் முதலிடம் பிடித்தார். தில்ஜித் 2-ம் இடம், பாலபிரசாத் 3-ம் இடம் பிடித்தனர். இதில் ஒட்டுமொத்த போட்டியில் விஷ்ணு பிரசாத் 70 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். தில்ஜித் 59 புள்ளிகளுடன் 2-ம் இடமும், ஆர்ய சிங் மற்றும் சந்தீப் குமார் ஆகியோர் 55 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளனர். 
ஜே.கே. டயர்நோவிஸ் கோப்பைக்கான போட்டியில் ஜேடன் முதலிடம், ஆதித்யா பரசுராம் 2-ம் இடம் நெய்யும் ரிஷ்மி 3-ம் இடம் பிடித்தனர். 
இதில் மோட்டார் சைக்கிளுக்கு தனியாக பந்தயம் நடத்தப்பட்டது. முடிவில் ஆல்வின் சேவியர் முதலிடம், மேகா விதுராஜ் 2-ம் இடம், அனிஷ் ஷெட்டி 3-ம் இடம் பிடித்தனர். முடிவில் மோட்டார் சைக்கிள் வீரர்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.