தேசியப் பங்குச்சந்தையின் (என்.எஸ்.இ) ரகசிய தகவல்களை பகிர்ந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட, என்.எஸ்.இ முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியத்தை மார்ச் 6ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் (என்.எஸ்.இ) முன்னாள் குழு செயல் அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியனின் சென்னை இல்லத்திலிருந்து வெறும் 13 மீட்டர் தொலைவில் உள்ள ஜியோடேக் செய்யப்பட்ட படங்கள், ஹிமாலயன் யோகி ஹோட்டல் முன்பதிவு செய்ததற்கு சுப்பிரமணியன் பணம் செலுத்தியுள்ளார். மின்னஞ்சல் இணைப்புகள் யோகி அனுப்பப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சுப்ரமணியன் அவர்களால் திருத்தியமைக்கப்பட்டது. மேலும், யோகி மற்றும் சுப்ரமணியன் தொடர்புகளில் பயன்படுத்திய வரிகள் ஒரே மாதிரியாக உள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் இயக்குநரும் சி.இ.ஓ.வுமான சித்ரா ராமகிருஷ்ணா ரகசிய சந்தை தகவலை கசியவிட்டதாகக் கூறப்படும் மர்மமான இமயமலை யோகி வேறு யாருமல்ல, சுப்ரமணியன் தான் என்பதை எர்ன்ஸ்ட் & யங் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
மார்ச் 6 வரை சுப்ரமணியனை காவலில் எடுத்துள்ள சிபிஐ, எர்னஸ்ட் & யங் (E&Y) அறிக்கையில் உள்ளதை, அடுத்த சில நாட்களில் சுப்ரமணியனிடம் விசாரணை நடத்தி கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளை சரிபார்த்து உறுதிப்படுத்தும்.
2018 ஆம் ஆண்டு பண மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐயால் சுப்ரமணியன் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். சுப்பிரமணியனை என்.எஸ்.இ குரூப் செயல் அதிகாரியாக விதிகளை மீறி நியமித்ததற்காகவும், என்.எஸ்.இ-யின் ரகசியத் தகவல்களை [email protected] என்ற மின்னஞ்சல் ஐடி மூலம் பகிர்ந்ததற்காகவும் ராமகிருஷ்ணா மீது இந்தியப் பங்குச் சந்தை வாரியம் (செபி) அறிக்கையின் பின்னணியில் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டார்.
மின்னஞ்சல் ஐடி மீதான E&Y விசாரணையில் இமயமலை யோகி என்பவர் சுப்ரமணியன் தான் என்பதை வலுவாக சுட்டிக்காட்டியுள்ளதாகவும் செபி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி, 2000 மற்றும் மே, 2018-க்கு இடையில் ராமகிருஷ்ணா, சுப்ரமணியன் மற்றும் இமயமலை யோகி இடையேயான தகவல்தொடர்புகளின் பகுப்பாய்வு அடிப்படையில் E&Y கண்டுபிடிப்புகள் அமைந்தன. ராம்கிருஷ்ணா ஏப்ரல் 2013 முதல் டிசம்பர் 2016 வரை என்.எஸ்.இ-ன் நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ.வாக இருந்தார். அதே காலகட்டத்தில்தான் சுப்பிரமணியனையும் நியமித்தார்.
[email protected] என்ற மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில் இணைக்கப்பட்ட இரண்டு ஜியோடேக் செய்யப்பட்ட படங்கள்தான் இமயமலை யோகி என்று E&Y மேற்கோள் காட்டிய வலுவான சமிக்ஞையாகும். இந்த ஜியோடேக் செய்யப்பட்ட படங்களின் இடம் சென்னையில் உள்ள சுப்பிரமணியன் இல்லத்திற்கு அருகில் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த அறிக்கையின்படி, இணைப்புகளுடன் கூடிய 17 மின்னஞ்சல்கள் E&Y ஆல் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த இணைப்புகளில், எட்டு படங்கள். “… 2 படங்கள் (2 மின்னஞ்சல்களுடன் தொடர்புடையது) ஜியோடேக் செய்யப்பட்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். மேலும், அந்த இடம் சென்னையில் உள்ள சுப்புவின் (சுப்ரமணியன்) குடியிருப்பு முகவரிக்கு அருகில் இருப்பதாகத் தோன்றியது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
படத்தில் உள்ள இடம் “53 2வது பிரதான சாலை தேனாம்பேட்டை சென்னை தமிழ்நாடு 600018 இந்தியா”. அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை “13.03524°, 80.24791°” என்று காட்டியது. சுப்பிரமணியனின் குடியிருப்பு முகவரி – “எண். 2/14, II மெயின் ரோடு, இரண்டாம் தளம், சீத்தம்மாள் காலனி, விரிவாக்கம், சியெட் கல்லூரி எதிரில், தேனாம்பேட்டை, சென்னை 600018 – “13.036528, 80.253271” என்ற அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
சுப்பிரமணியன் தனியாக தனது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடியிலிருந்து ராமகிருஷ்ணாவுக்கு அனுப்பிய பட இணைப்புகளுடன் கூடிய இரண்டு மின்னஞ்சல்கள் ஒரே மாதிரியாக உள்ளது என்று E&Y குறிப்பிட்டுள்ளது.
“இந்தப் புகைப்படங்கள் கைப்பற்றப்பட்ட இடம் rigyajursama மின்னஞ்சலில் அனுப்பிய புகைப்படங்களின் கைப்பற்றப்பட்ட இடத்தைப் போலவே இருந்தது. இந்த புகைப்படத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை “13.03514, 60.24779°” என்பதைக் காட்டியது. பொது டொமைன் தகவலின் அடிப்படையில், சுப்பு (13.03514 °, 80.24778 °”) மற்றும் [email protected] (“13.03524 °, 80.24791 °”) அனுப்பிய புகைப்படங்களின் (அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை) இடையே உள்ள தூரம் 13 மீட்டர்கள்” என்று அறிக்கை கூறியது.
E&Y மேற்கோள் காட்டிய மற்றொரு ஆதாரம் உமைத் பவனில் ஒரு ஹோட்டல் முன்பதிவு. டிசம்பர் 1, 2015 அன்று, [email protected] ராம்கிருஷ்ணாவுக்கு (சுப்ரமணியன் என்றும் குறிக்கப்பட்டது) மின்னஞ்சல் அனுப்பியது, கஞ்சனின் – சுப்ரமணியனைப் பற்றிய குறிப்பு – விடுமுறை உமைத் பவனில் ME-ஆல் அங்கீகரிக்கப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டது” என்று காட்டுகிறது.
“சுப்புவின் வங்கிக் கணக்குப்பதிவு தகவல்களில், 27 நவம்பர், 2015 தேதியிட்ட பரிவர்த்தனையின்படி, உமைத் பவன் பேலஸ்க்கு ரூ. 2,37,984 தொகை மாறியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”