ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமிடையிலான போர் நான்காவது நாளாக தீவிரமடைந்துள்ளது. ரஷ்யப் படையினர் வாசில்கிவ், கீவ், செர்னிகிவ், சுமி, கார்கிவ் போன்ற நகரங்களைத் தாக்கிக் கொண்டிருப்பதால், நிலை மோசமடைந்திருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யப் படைகளுக்கும், உக்ரேனிய படைகளுக்கும் இடையேயான போரில், உக்ரைன் முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ போர் உடைகளுடன் கியெவ் நகரில் மக்களுடன் உள்ள வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் வெளியான இந்த வீடியோவில், கியெவ் மக்களுடன் போர் உடையில் உள்ள போரோஷென்கோ, `ரஷ்யாவுக்கு எதிரான இந்த போரில் உக்ரைனை ஆதரித்த அனைத்து சர்வதேச தரப்பினருக்கும் நன்றி. உக்ரைனும் அதன் மக்களும் தனியாக இல்லை என்பதற்கு இதுவே பெரிய சாட்சி. நாங்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் ஜனநாயகமாக இருக்க விரும்புகிறோம். எங்கள் நாட்டை நாங்கள் மீண்டும் ஐரோப்பிய குடும்பத்திற்கே திருப்பித் தர விரும்புகிறோம். புதின் உக்ரைனை வெறுக்கிறார், அவர் உக்ரேனியர்களை வெறுக்கிறார்’ என உணர்ச்சிகரமாக பேசியிருந்தார்.
உக்ரைன் மக்களுடன் களத்தில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் நிற்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.