லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் எல்ஐசி (LIC) நிறுவனத்தின், ஐபிஓ விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது முதலீட்டாளர்கள், சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக பாலிசிதாரர்களுக்கு சில சலுகைகளையும் அறிவித்துள்ளது.
எல்ஐசி நிறுவனத்தில் பாலிசி வைத்திருக்கும் பாலிசிதாரர்கள் பங்கு வெளியீட்டில் பங்குகளை வாங்க நினைத்தால், பிப்ரவரி 28-க்குள் எல்ஐசி- பாலிசியுடன் பான் நம்பரையும் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
எல்ஐசி ஐபிஓ: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. அப்போ இந்திய முதலீட்டாளர்கள்..?!
10% பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கீடு
முன்னதாக மொத்த வெளியீட்டில் 10% இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்படும் என எல்ஐசி முன்னதாக அறிவித்திருந்தது. அதோடு பாலிசி ஹோல்டர்களுக்கு வெளியீட்டு விலையில் சலுகை அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. ஆக எல்ஐசியின் இந்த பலன்களை அனுபவிக்க வேண்டுமெனில் பாலிசிதாரர்கள் கட்டாயம், பாலிசியுடன் பான் நம்பரை இணைக்க வேண்டும்.
பான் அவசியம்
எல்ஐசி -யின் இந்த மெகா பங்கு வெளியீட்டில் சாதாரணமாக சில்லறை முதலீட்டாளார்கள் அனைவருக்கும் பங்கு கிடைக்குமா? என்பது சந்தேகமா உள்ள நிலையில், பாலிசி ஹோல்டர்கள் எளிதில் ஐபிஓ-வில் பங்குகளை பெற கட்டாயம் பான் நம்பரை இணைத்திருந்தால் உதவும் என நம்பப்படுகிறது.
எப்படி இணைப்பது?
எல்ஐசி-யின் https://licindia.in/ என்ற அதன் அதிகாரப்பூர்வ இணைதளத்திற்கு செல்லுங்கள்.
அதில் Online pan registration என்பதை கிளிக் செய்யவும்.அது அடுத்ததாக ஒரு புதிய பக்கத்தில் தொடங்கும். அதில் Proceed என்ற ஆப்சன் இருக்கும்.
அடுத்ததாக உங்களது இமெயில், பான் எண், மொபைல் எண், பாலிசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடவும்.
அதன்பிறகு கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ட்சா எழுத்தினை பதிவு செய்யவும். அதன் பிறகு ஓடிபி என்பதை கிளிக் செய்தால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.
ஓடிபி-யை பதிவு செய்து பிறகு சப்மிட் கொடுத்தால், உங்கள் பதிவு வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது என வரும்.
எப்படி செக் செய்வது?
https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/getPolicyPANStatus என்ற இணைய பக்கத்தில் சென்று உங்களது பாலிசி எண், பிறந்த தேதி, உங்களது பான் நம்பர், கேப்ட்சா எழுத்துகளை கொடுத்து சப்மிட் கொடுக்கவும். இதில் உங்களது பாலிசியுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
ஆக மொத்தத்தில் நாளை தான் கடைசி நாள் என்பதால் விரைவில் பாலிசி ஹோல்டர்கள் அப்டேட் செய்து கொண்டால், சலுகைகளை பெறலாம்.
LIC IPO latest updates: Last day to link policies with PAN for IPO ends tomorrow
LIC IPO: LIC policyholders must link pan with policies by February 28/எல்ஐசி IPO.. பலன் கிடைக்கணுன்னா பாலிசிதாரர்கள் பிப்ரவரி 28-க்குள் இதை கட்டாயம் செய்திருக்கணும்!