புதுடில்லி: சர்வதேச உறவுகளில், நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர பகைவனும் இல்லை. நிரந்தர நலன்களே முக்கியம் என்ற பழமொழி உண்டு. இது இந்தியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான உறவில் மிக கச்சிதமாக பொருந்தும். ரஷ்யா நடத்தும் தாக்குதலை நிறுத்த இந்தியாவிடம் வலியுறுத்தி வரும் உக்ரைன் நாடு, முக்கியமான தருணங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளதுடன், பல முறை நமது முதுகிலும் குத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
அமைதியை விரும்பும் இந்தியா @@subtitle
@@
இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. அண்டை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுடனும் சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது. இதற்கு பாகிஸ்தான் விதிவிலக்காக இருக்கலாம். சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த போதும் கூட உக்ரைனுடன் நட்புறவையே இந்தியா பேணி வந்தது. சோவியத் யூனியனில் இருந்து தனி நாடாக பிரிந்த பின்னர், உக்ரைனை முதலில் அங்கீகரித்த நாடு முதல் நாடு இந்தியா தான். 1991 டிசம்பரில் இறையாண்மை மிக்க நாடாக உக்ரைனை அங்கீகரித்தது. 1992 ல் இரு நாடுகளும் தூதரக ரீதியிலான உறவை ஏற்படுத்தின. அதற்கு அடுத்த ஆண்டு, ஆசியாவில் முதலாவதாக டில்லியில் தான் உக்ரைன் நாடு தனது முதல் தூதரகத்தை ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கு இடையே இதுவரை 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பல முனைகளில் இரு நாடுகளும் நட்புறவாக இருந்தாலும் உக்ரைனுடனான இந்தியாவின் உறவு எப்போதும் மகிழ்ச்சியாக இல்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
இந்தியாவிற்கு கண்டனம்
1998 ல் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்தியா 5 அணுகுண்டு சோதனை மேற்கொண்டது. இது இந்தியாவை அணுசக்தி நாடாக மாற்றியதுடன், இந்தியாவின் நீண்டகால பாதுகாப்பு நலன்களையும் உறுதி செய்தது. இதற்கு உலக நாடுகள் பெரும்பாலானவை எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா.,வில் இந்தியாவின் சோதனைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த 25 நாடுகளில் உக்ரைனும் ஒன்று. அதேகாலத்தில் இந்தியா மீது பொருளாதார தடை விதித்த நாடுகள் பட்டியலில் அந்த நாடும் இணைந்தது.உக்ரைனின் அங்கீகாரம் பெற்ற ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தில், அணுஆயுத சோதனைகளை இந்தியா தவிர்க்க வேண்டும் எனக்கூறப்பட்டதுடன், அணு ஆயுத பரவல் தடை சட்டத்திலும், விரிவான அணு சோதனை தடை ஒப்பந்தத்திலும் இணைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவு
ஆயுதங்கள் மற்றம் தளவாடங்களுக்கு ரஷ்யாவையே இந்தியா பெரிதும் சார்ந்திருந்தது. அதேபோல், பாகிஸ்தானும். உக்ரைனை சார்ந்திருந்தது. இரு நாடுகளும் பல தாப்தங்களாக வர்த்தக உறவை கொண்டிருந்தன. உக்ரைனின் மிகப்பெரிய வாடிக்கையாளராக பாகிஸ்தான் இருந்து வந்தது. 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அந்நாட்டிற்கு உக்ரைன் விற்பனை செய்துள்ளது. பாகிஸ்தான் வசம் உள்ள டி–80 டாங்குகள் உக்ரைன் தயாரிப்பாகும். அதிநவீன டி80 போர் டாங்குகளை விற்பனை செய்வதற்கும் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் உள்ளது.
ஆயுத தளவாடங்களுக்கு சீனாவை சார்ந்திருக்க பாகிஸ்தான் மாறினாலும், இந்தியாவை ஏமாற்றி அந்நாட்டிற்கு ஆயுதங்களை பாகிஸ்தான் வழங்கி வந்தது. பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு போக்கை இந்தியா அம்பல படுத்தினாலும், பாகிஸ்தானுக்கு 320 டி 80 டாங்குகளை உக்ரைன் விற்பனை செய்தது. மேலும், காஷ்மீர் விவகாரத்திலும் இந்தியாவை ஆதரித்தது இல்லை.
Advertisement