ஆதார் எண்ணை, இந்திய தனி அடையாள ஆணையம் (UIDAI) இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் அரசின் நலத் திட்டங்கள் சரியான பயனாளியைச் சென்றடைவது உறுதி செய்யப்படுவதுடன், பல்வேறு துறைகளில் நடைபெறும் மோசடிகளும் தடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் யுஐடிஏஐ, அண்மைக்காலமாக கையடக்கமான, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை விநியோகித்து வருகிறது. இதற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பதிவு செய்யப்படாத செல்பேசி எண்: ஆதாரில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்தால் மட்டுமே ஆதார் அட்டைக்கு ஆர்டர் செய்ய முடியும். இந்த அட்டை வழங்குவதை எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக, ஆதாரில் பதிவுசெய்யப்படாத எண்ணைக் கொண்டும் ஆர்டர் செய்யும் சேவையை யுஐடிஏஐ தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையை https://myaadhaar.uidai.gov.in/genricPVC என்ற இணையதளத்தில்பெறலாம். 5 நாட்களில் விரைவுஅஞ்சலில் ஆதார் அட்டை வந்துசேரும். குடும்பத்தினர் அனைவருக்கும் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற இதில் விண்ணப்பிக்கலாம்.
இந்த முறையில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதா? என யுஐடிஏஐ நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆதார் அட்டை பெற யார் விண்ணப்பித்தாலும், அட்டையில் உள்ள முகவரிக்குத்தான் பிளாஸ்டிக் ஆதார் அட்டை செல்லும். விண்ணப்பிப்பவரின் முகவரிக்கு செல்லாது. எனவே, முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை’’என்றனர்.