புது காதல்: ஆசி கேட்கும் ஐஸ்வர்யா ரஜினி

காதல் கணவரான தனுஷை பிரிந்து வாழும் இந்த சங்கடமான நேரத்தில் புது முயற்சியில் இறங்கியிருக்கிறார்
ஐஸ்வர்யா
ரஜினிகாந்த். அதாவது படங்களை மட்டுமே இயக்கி வந்த அவர் முதல் முறையாக காதல் பாடல் வீடியோவை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

Dhanush:’அந்த’ ஒத்த பாயிண்ட்டை வச்சு தனுஷ், ஐஸ்வர்யாவை மடக்கிய ரஜினி
முசாபிர்
எனும் அந்த காதல் பாடலின் கதை ஐஸ்வர்யாவின் நிஜ கதையோடு ஒத்துப் போகும். தென்னிந்திய திரையுலகை சேர்ந்த சூப்பர் ஸ்டாரின் மகளுக்கும், மும்பையை சேர்ந்த பையனுக்கும் இடையேயான காதலே முசாபிரின் கதை.

இந்நிலையில் முசாபிர் பாடலின் இரண்டாவது நாள் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ஆசிகள் தேவை என தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

View this post on Instagram A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryaa_r_dhanush)
அந்த வீடியோவை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். முசாபிர் எனும் புது காதல் தொடர்பாகத் தான் ஆசி கேட்டிருக்கிறார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் அண்ணனுடன் மீண்டும் சேர வேண்டும் என்று
தனுஷ்
ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நானும், தனுஷும் மீண்டும் சேரப் போகிறோம் என்று எப்பொழுது அப்டேட் கொடுப்பீர்கள் அண்ணி என அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.