லண்டன்-உக்ரைன் மீதான போரில், ரஷ்ய தரப்பு வீரர்களின் உயிரிழப்பை மறைப்பதற்காக, நடமாடும் தகன மேடையை ரஷ்யா பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் கீவ்வை கைப்பற்ற, உச்சகட்ட போர் நடந்து வருகிறது. ‘வீடியோ’போர் துவங்கியது முதல், உக்ரைனில் மூன்று குழந்தைகள் உட்பட, 198 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரஷ்யா தரப்பில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை குறித்து, ரஷ்ய ராணுவம் தகவல் வெளியிடவில்லை. இந்நிலையில், உக்ரைனுக்குள் படையெடுத்து வரும் ரஷ்ய ராணுவ வீரர்களுடன், நடமாடும் தகன மேடை உடைய வாகனமும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஒரு நேரத்தில் ஒரு உடலை எரியூட்டக் கூடிய அந்த வாகனத்தின், ‘வீடியோ’ காட்சியை, பிரிட்டன் ராணுவ அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
ரஷ்ய வீரர்கள் தரப்பிலான உயிரிழப்புகளை மறைப்பதற்காக, இந்த நடமாடும் தகன மேடை பயன்படுத்தப்படுவதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.கவலைஇது குறித்து, பிரிட்டன் ராணுவ அமைச்சர் பென் வாலஸ் கூறியதாவது:நான் ஒரு சிப்பாயாக இருந்து, என் தளபதிகளுக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல், உயிரிழப்புகளை மறைப்பதற்காக நடமாடும் தகன மேடையை எங்களுடன் போர் களத்துக்கு அனுப்பினால், அது என்னை கவலை அடைய செய்யும். ரஷ்யா தங்கள் போர் வீரர்களை இவ்வாறு நடத்துவது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement