மீண்டும் நடிப்புக்கு திரும்பிய வினித் சீனிவாசன்
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் வினித் சீனிவாசன். இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு படம் இயக்குவார். அதற்கிடையே கிடைக்கும் இடைவெளியில் சில படங்களில் நடிப்பார். அப்படி சமீபத்தில் மோகன்லால் மகன் பிரணவ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்த ஹிருதயம் என்கிற படத்தை இயக்கினார் வினித் சீனிவாசன். அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்து, தற்போதும் கேரள தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார் வினித். தற்போது 'முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்' என்கிற படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் இந்த படத்தில் அவர் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது படத்தின் டைட்டில் டிசைனை பார்க்கும்போதே தெரிகிறது. அபிநவ் சுந்தர் எனும் அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார்.