கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் பரவியது. இது, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது, சுகாதாரத் துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு ஒமைக்ரான் பரவல் காரணம் எனக் கூறப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, ஹாங்காங்கில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், மருத்துவமனைகளில் படுக்கைகளும் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. மருத்துவப் பணியாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அடங்க மறுக்கும் ரஷ்யா – சர்வதேச நீதிமன்றத்தை நாடிய உக்ரைன்!
ஹாங்காங்
பல்கலைக்கழகம் ஆய்வின் படி, வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதிக்குள் ஹாங்காங்கில் கொரோனா ஐந்தாவது அலை கோரத் தாண்டவமாடும் என்றும், அப்போது தினசரி 1 லட்சத்து 80 ஆயிரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.