மாஸ்கோ: பெலாரஸ் நாட்டில் வைத்து ரஷ்யாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்து இருப்பதாவது: பேச்சுவார்த்தை நடத்த பெலாரஸ் நாட்டின் கோமல் நகருக்கு உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் செல்வார்கள் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
முன்னதாக பெலாரஸ் நாட்டின் வழியாக உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யபடைகள் நுழைந்துள்ளதால் பெலாரஸ் நாட்டில்வைத்து ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என உக்ரைன் தெரிவித்திருந்தது.
ரஷ்ய தற்காப்பு படையினருக்கு அதிபர் புடின் புதிய உத்தரவு
இந்நிலையில் ரஷ்ய தற்காப்பு படையினருக்கு அதிபர் புடின் புதிய உத்தரவு பிறப்பித்தள்ளார். அதில், உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடந்து வரும் நிலையில் ரஷ்ப படையினர் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால், ரஷ்ய அணு ஆயுத தடுப்பு பிரிவினர் எதிர்தாக்குதல் நடத்த தயாராக இருக்க வேண்டும் என புடின் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement