தங்கத்தின் தேவையானது நடப்பு ஆண்டில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டலாம் என சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக் காட்டியது. இதற்கிடையில் தற்போது இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது சாதகமாக அமையலாம்.
மேலும் இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பங்கு சந்தைகளும் கடும் ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அதிக சேமிப்பு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், தேவையானது தொடர்ந்து வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து பிசிகல் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
18மாத உச்சத்திலிருந்து தங்கம் விலை சரிவு.. ரஷ்யா – உக்ரைன் போருக்கு மத்தியில் தங்கம் வாங்கலாமா?!
ரஷ்யா – உக்ரைன் பதற்றம்
ரஷ்யா – உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மெதுவாகலாம். இதன் காரணமாக பல காமாடிட்டிகளின் விலை ஏற்கனவே உச்சம் தொட்டுள்ளது. இந்த காராணத்துக்கு மத்தியில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம்
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் ஏற்கனவே பணவீக்கமானது உச்சத்தில் இருந்து வருகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக ரஷ்யா – உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் சப்ளை செயினில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், பல அத்தியாவசிய கமாடிட்டிகளின் விலையானது உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக பணவீக்கம் இன்னும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.10,000 அதிகரிக்கலாம்
இப்படி பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் தங்கம் விலையானது உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிபுணர்கள் 10 கிராமுக்கு 10,000 ரூபாய் வரையில் உச்சம் தொடலாம் என கருதுகின்றனர். இதே நிர்மல் பேங்க் கணிப்பின் படி தங்கம் விலையானது அடுத்தாண்டில் 54000 – 55000 ரூபாயினை தொடலாம். இது 60000 – 62000 ரூபாயினை தொடலாம்.
பங்குகள் விற்பனை
கடந்த சில வாரங்களாகவே பங்கு சந்தையில் செல்லிங் பிரஷர் உள்ள நிலையில், பங்கு சந்தையில் இருந்து அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை
அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில் சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பும் சரிவினைக் கண்டு வருகின்றது. அதிலும் தற்போது தேவை மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இறக்குமதி அதிகரிக்கலாம். இதனால் பணவீக்கம் மீண்டும் உச்சம் தொடலாம். இதன் காரணமாக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comex தங்கம்
கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே ஏற்றம் காணத் தொடங்கிய தங்கம் விலையானது, வார இறுதியில் மீண்டும் சரிவினைக் கண்டது. இது கடந்த வாரத் தொடக்கத்தில் திங்கட்கிழமையன்று 1907.80 டாலர்களாக தொடங்கிய தங்கம் விலையானது, அதிகபட்சமாக வியாழக்கிழமையன்று 1976.50 டாலர்களை தொட்டது, எனினும் அன்றே குறைந்தபட்சமாக 1878.60 டாலர்களாக இருந்தது. இதே வெள்ளிக்கிழமையன்று சற்று குறைந்து, 1890.55 டாலர்களாவும் முடிவுற்றது. இது வரும் வாரத்திலும் உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தினை பொறுத்து இருக்கலாம்.
Comex வெள்ளி
வெள்ளி விலையும் வாரத் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து ஏற்றம் கண்டது. எனினும் வார இறுதியில் மீண்டும் சரிவினைக் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் 22.032 டாலர்களாக தொடங்கிய வெள்ளி விலை, வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக அன்றே 25.705 டாலர்களையும் தொட்டது. அன்றே 23.880 டாலராகவும் குறைந்தபட்ச லெவலை தொட்டது. இதன் பின்னர் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 24.305 டாலர்களாகவும் முடிவுற்றது.
MCX தங்கம்
இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது வாரத் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், பின்னர் ஏற்றம் கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராமுக்கு 50,070 ரூபாயாக தொடங்கிய தங்கம் விலையானது, அன்றே குறைந்தபட்சமாக 49,764 ரூபாயினை தொட்டது. எனினும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 52,797 ரூபாயினை எட்டியது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 50,220 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது வரும் வாரத்தில் உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தினை பொறுத்து இருக்கலாம்.
MCX வெள்ளி
வெள்ளியின் விலையானது வார தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கி, பின்னர் சரிவினைக் கண்டு முடிவடைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று கிலோவுக்கு 63,700 ரூபாயாக தொடங்கியது. இது வியாழக்கிழமையன்றே அதிகபட்சமாக 64,629 ரூபாயினையும் தொட்டது. வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 63,696 ரூபாயாகவும், முடிவில் 64,023 ரூபாயாக முடிவடைந்தது.
ஆபரண தங்கம் நிலவரம்
இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லை. இன்று கிராமுக்கு 4737 ரூபாயாகவும், சவரனுக்கு 37,896 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 10 கிராமுக்கு 47,370 ரூபாயாகவும் உள்ளது. இது இந்த வாரத் தொடக்கத்தில் சவரனுக்கு 37,816 ரூபாயாகவும் இருந்தது. கடந்த ஒரு வாரத்தில் சவரனுக்கு சற்று அதிகரித்துள்ளது.
தூய தங்கம் விலை
இன்று தூய தங்கத்தின் விலையானது 5165 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,690 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது இந்த வாரத் தொடக்கத்தில் 51,570 ரூபாயாகவும் இருந்தது. கடந்த ஒரே வாரத்தில் தூய தங்கம் விலையும் சற்று சரிவில் காணப்படுகின்றது.
ஆபரண வெள்ளி
இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 69 ரூபாயாக உள்ளது. இதே 10 கிராமுக்கு 690 ரூபாயாகவும், கிலோவுக்கு 69000 ரூபாயாகவும் உள்ளது. இது நடப்பு வாரத் தொடக்கத்தில் 68,200 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இனி என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளியினை பொறுத்தவரையில் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள், நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம். இதே நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். இதே ஆபரணத் தங்கத்தின் தேவையானது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
gold price on 27th February 2022: gold price may go up by Rs.10,000 in 2 years
gold price on 27th February 2022: gold price may go up by Rs.10,000 in 2 years/ரஷ்யா – உக்ரைன் பதற்றம்.. தங்கம் விலை ரூ.10,000 வரை அதிகரிக்கலாம்.. இது வாங்க சரியான தருணம்..!