ஜேர்மன் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் மத்திய போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சக அறிவிப்பின்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணி முதல் (1400 UTC) ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்ததை அடுத்து, ஜேர்மன் பொறுப்பு அமைச்சர் வோல்கர் விஸ்சிங் (Volker Wissing) இந்த முடிவை எடுத்தார்.
தொடர்ந்து மூன்று நாட்களாக ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் வரை இறங்கி தாக்குதல் நடத்தியா நிலையில், நேற்று ஜேர்மனி அதன் கொள்கையை மாற்றிக்கொண்டு, உக்ரைனுக்கு ஊடாடியாக ஆயுதங்களை வழங்க ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று இந்த வான்வெளி தடையை அமுல்படுத்தியுள்ளது.
ஏற்கெனெவே பிரித்தானியா, எஸ்டோனியா, போலந்து, பல்கேரியா, செக் குடியரசு உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய விமானங்கள் அவற்றின் ஆகாயவெளியில் பறப்பதற்குத் தடை விதித்துள்ளன.