புகாரெஸ்ட்:
உக்ரைன்-ரஷியா போரினால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடுகள் உதவியுடன் மீட்கும் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்தியர்கள் மீட்பு நடவடிக்கைகாக ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் இருந்து ஐந்து விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இருந்து 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களின் பட்டியலை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா வெளியிட்டுள்ளார்.
ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு தூதர்களையும் தனித்தனியாக அழைத்து, இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்த தமது கவலைகளை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
இரு தூதர்களும் இந்தியாவின் கவலைகளை கவனத்தில் கொண்டு இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்துள்ளதாகவும், ஹர்ஷ் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து 249 இந்தியர்களுடன் 5வது சிறப்பு விமானம் டெல்லிக்கு புறப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இதை உறுதிபடுத்தி உள்ளார். இந்த விமானம் காலை 5 மணி அளவில் டெல்லி விமான நிலையம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.