ஏமன் நாட்டின் சனா விமான நிலையத்தின் மீது சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏமன் நாட்டின், சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போர் விமானங்கள் மூலம் ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், ஏமன் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதில் 16 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – உக்ரைன் போட்ட கண்டிஷன்!
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் உள்ள எண்ணெய்க் கிடங்கில், ஆறு ட்ரோன்கள் மூலம் ஏமன் நாடு தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சனா சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக இன்று வடகொரியா சந்தேகத்திற்கிடமான ஏவுகணைகளை வீசியதாக தென் கொரியா கூறியிருந்தது. ஒருபுறம் தொடர்ந்து நான்காவது நாளாக உக்ரைன் – ரஷ்யா இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் மற்றொரு நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் அரங்கேறி உள்ளது என்பது கடும் அதிர்வலைகளை உண்டாகியுள்ளது.