வியட்நாமில் சுற்றுலா படகு மூழ்கியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் ஹனோய்க்கு தெற்கே 800 மைல் தொலைவில் உள்ள ஹோய் ஆன் அருகே 39 சுற்றுலாப் பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக அலைகள் வேகமாக எழுந்ததால் அலைக்கழிக்கப்பட்ட படகு திடீரென கவிழ்ந்தது.
13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், 4 பேர் காணாமல் போனதாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. காணமால் போனவர்கள் உயிருடன் இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என ஹோய் ஆன் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.