மத்திய அரசு உரம், நீர்ப்பாசனம், விவசாய உபகரணங்கள், விவசாயம் செய்வதற்கான நிதி, விதை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு மானியங்களை வழங்குகிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2% விவசாய மானியங்களாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கான மொத்த மானியம் அவர்களின் விவசாய வருமானத்தில் 21% ஆக உள்ளது.
நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வரும் தொழிலாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள், தேவையான நவீன முறைகளையும் பாரம்பரிய முறைகளையும் விவசாயத்தை மேம்படுத்துவதோடு மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை பெற்று பயனடைய வேண்டும்.
இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களில் மொத்தம் 8 வகை மானியங்கள் உள்ளன. அந்த மானியங்களைப் பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.
- விதை மானியம்
- உரம் மானியம்
- நீர்ப்பாசன மானியம்
- மின்சார மானியம்
- ஏற்றுமதி மானியம்
- கடன் மானியம்
- விவசாய உபகரணங்கள் மானியம்
- விவசாய உள்கட்டமைப்பு மானியம்
விதை மானியம்
அதிக மகசூல் தரும் விதைகளை அரசாங்கம் நியாயமான விலையில் வழங்குகிறது. இத்தகைய வளமான விதைகளை உருவாக்க தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்கிறது; இந்த நடவடிக்கைகளுக்கான செலவு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்தின் ஒரு வடிவமாகும்.
உரம் மானியம்
குறைந்த விலையில் இரசாயன அல்லது இரசாயனமற்ற உரங்களை விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கானது உரம் மானியம். இது உரம் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் விலைக்கும் விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசம்; உரத்தின் விலையில் விவசாயிகள் அளித்த தொகைக்க்கு பிறகு, மீதி உள்ள தொகையை அரசு ஏற்கிறது. இந்த மானியம் பின்வருவனவற்றை உறுதி செய்கிறது:
விவசாயிகளுக்கு மலிவான இடுபொருட்கள் கிடைப்பதையும், உர விலையில் ஸ்திரத்தன்மை. உற்பத்திக்கான நியாயமான வருமானம், விவசாயிகளுக்கு தேவையான அளவு உங்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்வதாகும்.
நீர்ப்பாசன மானியம்
நீர்ப்பாசன மானியத்தின் கீழ், சந்தை விலையைவிட குறைந்த விலையில் அரசு நீர்ப்பாசன சேவைகளை வழங்குகிறது. இது பாசன உள்கட்டமைப்பிற்கான அரசின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கும் விவசாயிகள் செலுத்தும் பாசனக் கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
கால்வாய்கள், அணைகள், குழாய்க் கிணறுகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் போன்ற பொது பாசன ஆதாரங்களைக் கட்டுவதன் மூலமும், விவசாயிகளிடம் அவற்றின் பயன்பாட்டிற்கு (சில சூழ்நிலைகளில்) குறைந்த கட்டணமோ அல்லது கட்டணம் வசூலிப்பதன் மூலமோ இதை நிறைவேற்ற முடியும். பம்ப் செட் போன்ற குறைந்த விலையில் நீர்ப்பாசன உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மின்சார மானியம்
மின்சார மானியங்கள் விவசாயிகளுக்கு அவர்கள் பெறும் மின்சாரத்திற்கு குறைந்த கட்டணத்தை அரசு வசூலிக்கிறது என்பதைக் குறிக்கிறது. விவசாயிகள் முதன்மையாக பாசன நோக்கங்களுக்காக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றனர். இது விவசாயிகளுக்கு மின்சக்தி உற்பத்தி மற்றும் விநியோக செலவுக்கும் அவர்களுக்கு வழங்கப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
அரசின் மின்சார வாரியங்கள் தங்கள் சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் அல்லது NTPC மற்றும் NHPC போன்ற நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்கலாம். மின் மானியம் பம்ப் செட், ஆழ்துளை கிணறுகள், குழாய் கிணறுகள் மற்றும் பிற நீர்ப்பாசன முறைகளில் முதலீடு செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கிறது.
ஏற்றுமதி மானியம்
இந்த மானியம் விவசாயிகளுக்கு உலக அளவில் போட்டியிட உதவும் வகையில் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி அல்லது ஏற்றுமதியாளர் விவசாய பொருட்களை வெளிநாட்டு சந்தையில் விற்கும்போது, அவர் தனக்காக பணம் சம்பாதித்து, அரசாங்கத்திற்கு அந்நிய செலாவணியை ஈட்டுகிறார்.
இதன் விளைவாக, உள்நாட்டுப் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாதவரை விவசாய ஏற்றுமதிகள் பொதுவாக ஊக்குவிக்கப்படுகின்றன. ஏற்றுமதி மானியங்கள் என்பது ஏற்றுமதியைத் தூண்டுவதற்காக வழங்கப்படும் நிதிச் சலுகைகள் ஆகும்.
கடன் மானியம்
இது விவசாயிகளுக்கு வசூலிக்கப்படும் வட்டிக்கும் கடன் வழங்குவதற்கான உண்மையான செலவுக்கும் இடையேயான வித்தியாசம் ஆகும். மோசமான கடன் தள்ளுபடி போன்ற பிற செலவுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியாகும். பின்தங்கிய விவசாயிகளுக்கு கடன் கிடைப்பது ஒரு முக்கிய பிரச்சினை. விவசாய உபகரணங்களை வாங்குவதற்கு அவர்களுக்கு நிதி இல்லை. தேவையான ஜாமீன் இல்லாததால் கடன் பெற அணுக முடியவில்லை. உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர்கள் உள்ளூரில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை அணுகுகின்றனர்.
விவசாயிகளின் வறிய நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, கடன் கொடுப்பவர்கள் அதிக அளவில் வட்டி வசூலிக்கின்றனர். பல நேரங்களில், வங்கி நிறுவனங்கள் நகரங்களில் இருப்பதாலும், விவசாயக் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாததாலும் விவசாயிகளிடம் சொத்து இருந்தாலும் கடன் பெற முடியவில்லை.
வேளாண் உபகரணங்கள் மானியம்
வேளாண்மை இயந்திரமயமாக்கலின் துணைத் திட்டம் (SMAM), ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY) போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் மாநில அரசுகள் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு விவசாய பணிகளுக்காக உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் மானியமாக வழங்கப்படுகின்றன. தோட்டக்கலையின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்காக தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் (NFSM) மூலம் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் பனை ஆகிய வற்றுக்காக மானியம் வழங்கப்படுகின்றன.
விவசாய உள்கட்டமைப்பு மானியம்
பல சந்தர்ப்பங்களில், விவசாய உற்பத்தியை அதிகரிக்க தனியார் முயற்சிகள் போதுமானதாக இல்லை. உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளுக்கு, நல்ல சாலைகள், சேமிப்பு வசதிகள், மின்சாரம், சந்தை நுண்ணறிவு, துறைமுகங்களுக்கு போக்குவரத்து போன்றவை அவசியம். இந்த வசதிகள் பொதுப் பொருட்களின் வகையின் கீழ் உள்ளன. அவற்றின் விலைகள் அதிகம். ஆனால், அதன் நன்மைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“