நடிகர்
அஜித்
நடிப்பில் உருவான
வலிமை
படம் ஒருவழியாக வெளியானது.
வினோத்
இயக்கத்தில்
போனி கபூர்
தயாரிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக உருவான வலிமை பட பலப்போராட்டங்களுக்கு பிறகு பிப்ரவரி 24 ஆம் தேதி திரைக்கு வந்தது.
அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வந்தாலும் பொதுவான சினிமா ரசிகர்கள் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களையே கூறிவருகின்றனர். இருப்பினும் வலிமை படத்தின் வசூல் அடித்து நொறுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிலேயே 34 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது வலிமை.
ரஜினி அமைக்கப்போகும் வெறித்தனமான கூட்டணி…வெளியான சூப்பர் தகவல்..!
கலவையான எதிர்மறை விமர்சனங்கள் இப்படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில் வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணியில் AK 61 படம் உருவாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை சில நாட்களுக்கு முன் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.
அஜித்
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும் இக்கூட்டணியில் சில மாற்றங்கள் நடைபெறும் என்றும் தெரிகிறது. என்னவென்றால் இக்கூட்டணியில் உருவான கடந்த இருபடங்களுக்கும் இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பதில் AK 61 படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளன.
வலிமை
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு தகவல் இப்படத்தைப்பற்றி வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான
கவின்
AK61 படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான லிப்ட் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது
AK61
படத்தில் நடிக்கவிருக்கிறார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் நெல்சனின் உதவி இயக்குனராகவும் சில படங்களில் வேலைசெய்துள்ளார். இந்நிலையில் இவர் கவின் அஜித்துடன் இணைந்து நடிக்கப்போவதாக வந்த தகவல் கவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வலிமை விமர்சனம்; அஜித் ரசிகர்களின் அட்டகாசம்!