உக்ரைனிலிருந்து இரண்டாம் விமானம் வருகை
உக்ரைனில் இருந்து புறப்பட்ட இரண்டாம் விமானத்தில் தமிழக மாணவர்கள் 5 பேர் உள்பட 250 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ருமேனியாவின் புகாரெஸ்ட் வழியாக வந்தவர்களை மத்திய அமைச்சர் ஜோதிராத்ய சிந்தியா வரவேற்றார். முன்பு வந்த விமானத்தில் 219 இந்தியர்கள் மும்பை வந்தனர். அவர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரவேற்றார்.
கீவ் எங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது – உக்ரைன் அதிபர்
கீவ் நகரம் இன்னும் எங்களது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து எங்களுக்கு முழுமையான ஆதரவு கிடைத்து வருகிறது. போரில் நிச்சயம் வெல்வோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனை சுற்றிவளைத்து தாக்க ரஷ்யா உத்தரவு
உக்ரைனின் அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் நடத்த ரஷ்ய படைகளுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்த விட்டதாக கூறப்பட்ட நிலையில், தாக்குதலை ரஷ்ய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு மேலும் ரூ.26,000 கோடி ராணுவ உதவி – அமெரிக்கா
உக்ரைனுக்கு மேலும் ரூ26 ஆயிரம் கோடிக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஏற்கனவே 4,500 கோடி ரூபாய் மற்றும் 18 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். இன்று மாலை மேலும் 12 மாணவர்கள் சென்னை வர உள்ளனர்: மாணவர்களின் பயண செலவு முழுவதும் அரசே ஏற்கும் என்றார் அவர்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, சிறிது நேரத்திலேயே மீட்கப்பட்டதாக
தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கே.கே.நகரில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து சொட்டு மருந்து முகாமலை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்கள் மீட்க சென்ற 3 ஆவது விமானம், ஹங்கேரி நாட்டிலிருந்து புறப்பட்டு டெல்லி வந்தடைந்தது. அதில் வந்த 12 தமிழக மாணவர்கள், மதியம் சென்னை அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள், கேரள மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை விமான நிலைய அதிகாரிகளும், பெற்றோர்களும் வரவேற்றனர்.
உக்ரைனில் வாசில்கிவ் நகரில் உள்ள எண்ணெய் முனையத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ரஷ்ய ஏவுகணைகள் விமான தளத்தின் பிரதான ஓடுபாதையின் தென்மேற்கே உள்ள எண்ணெய் சேமிப்புப் பகுதியை தாக்கியதாக அப்பகுதி மேயர் தெரிவித்துள்ளார்.எரிவாயுக் குழாய் வெடித்துச் சிதறியது குறித்து காணொலி வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த வீடியோவை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
The footage shows a gas pipeline on fire in Kharkiv after a Russian attack.
Video: State Special Communications Service of Ukraine pic.twitter.com/owuSoKqoFA
— The Kyiv Independent (@KyivIndependent) February 27, 2022
உக்ரைனுக்கு ஆதரவாக உலகளாவிய வங்கி தகவல் பரிவர்த்தனை சேவை (SWIFT) அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளது.
ரஷ்ய சேனல்களின் விளம்பரத்துக்கான வருவாயை தடை செய்துள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பேஸ்புக் விளம்பர வருவாய்க்கு தடை விதித்த நிலையில், தற்போது யூடியூப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.