இன்று (28) முதல் சதொச விற்பனை நிலையங்களினூடாக சலுகை விலைக்கு மஞ்சள் தூள் வழங்கக்கூடிய வகையில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அதன்படி, நுகர்வோருக்கு ஒரு கிலோகிராம் மஞ்சள் தூளை ரூ.2,400க்கு சதொச விற்பனை நிலையங்களினூடாக கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் மஞ்சள் தூள் சுமார் ரூ.4,000 வரை விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, 350,000 கிலோ கிராமுக்கும் அதிகமான மஞ்சள்களை பலசரக்கு கூட்டுத்தாபனம் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.