அடித்தது ஜாக்பாட்.. ஓரே நாளில் 19% லாபம்..!

பியூச்சர் ரீடைல் நிறுவனத்தை நீண்ட காலமாகச் சுற்றி வந்த பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தாலும், தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் ரீடைல் கடைகள் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றத் துவங்கியுள்ளது.

இதன் மூலம் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் சுமை குறைந்துள்ளது. இதன் வாயிலாகப் பல மாதங்களாகத் தொடர்ந்து சரிவிலேயே இருக்கும் பியூச்சர் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு இன்று மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது.

யார் இந்த மாதபி புரி பச்.. செபியின் புதிய தலைவராக நியமனம்..!

பியூச்சர் ரீடைல்

பியூச்சர் ரீடைல்

இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவு செய்து ஒப்பந்தம் செய்த போது அமெரிக்க நிறுவனமான அமேசான், கட்டுப்பாடுகளை மீறியுள்ளது என அறிவித்து இந்த ஒப்பந்தம் மீது வழக்கு தொடுத்துள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

இந்த வழக்கு இந்தியா, சிங்கப்பூரில் மாத கணக்கில் நடந்து வரும் நிலையில், பியூச்சர் ரீடைல் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் பல கடைகளின் குத்தகை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க முடியாத நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் இந்தக் கடைகளைத் தொடர்ந்து கைப்பற்றி வருகிறது.

250 கடைகள்
 

250 கடைகள்

இதன் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் பியூச்சர் ரீடைல் குழுமத்தின் 200 பெரிய பிக் பஜார் கடைகளையும், 50 சிறிய அளவிலான கடைகளையும் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பியூச்சர் ரீடைல் கடைகளை மட்டும் அல்லாமல் பியூச்சர் ரீடைல் ஊழியர்களையும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

திங்கட்கிழமை வர்த்தகத்தில் பியூச்சர் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிறுவன பங்குகள் 17 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை 71.50 ரூபாயாகவும், பியூச்சர் ரீடைல் நிறுவன பங்குகள் 13 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை 51.75 ரூபாயாகவும், பியூச்சர் மார்கெட் நெட்வொர்க் நிறுவன பங்குகள் 10 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை 9.70 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

19 சதவீத உயர்வு

19 சதவீத உயர்வு

இதேபோல் பியூச்சர் எண்டர்பிரைசர்ஸ், பியூச்சர் லைப்ஸ்டைல் நிறுவன பங்குகள் தலா 9 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை 8.99 மற்றும் 56.35 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. பியூச்சர் கன்ஸ்யூமர் நிறுவன பங்குகள் 7 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை 7.36 ரூபாயாகவும், பியூச்சர் எண்டர்பிரைசர்ஸ் DVR நிறுவன பங்குகள் 19 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை 12.85 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Future Group investor got jackpot; Future cos stocks rise upto 19 percent

Future Group investor got jackpot; Future cos stocks rise upto 19 percent அடித்தது ஜாக்பாட்.. ஓரே நாளில் 19% லாபம்..!

Story first published: Monday, February 28, 2022, 16:52 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.