மாஸ்கோ-உக்ரைனுக்கு எதிரான போர் குறித்து, பல ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அணு ஆயுதப் படைப் பிரிவை தயாராக இருக்கும்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
பொருளாதார தடை
ரஷ்யா மீதும், புடின் மீதும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து உள்ளன.மேலும், ரஷ்யாவுக்கு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. ஆலோசனைஇந்த கடும் விமர்சனங்கள் ரஷ்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் ரஷ்ய ராணுவ அமைச்சர், ராணுவ தலைமை தளபதி உள்ளிட்டோருடன் அதிபர் புடின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அணு ஆயுதப் படைப் பிரிவுகளை தயார் நிலையில் இருக்கும்படி புடின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்துடன், ரஷ்யா படைகளை இறக்கியுள்ளது. இந்நிலையில், புடினின் புதிய உத்தரவு, அணு ஆயுதப் போருக்கு வித்திடும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
மாஸ்கோ-உக்ரைனுக்கு எதிரான போர் குறித்து, பல ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அணு ஆயுதப் படைப் பிரிவை தயாராக இருக்கும்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.