அவரை பார்த்த பயத்திலே பல காட்சிகளில் சொதப்பி விட்டேன்…! மனம் திறந்த ராஷிகண்ணா…!

நடிகை
ராஷிகண்ணா
, வெப்தொடர் ஒன்றில் முன்னணி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதில், நடித்த அனுபவம் குறித்து பேசிய ராஷிகண்ணா, அந்த ஹீரோவுடன் நடிக்கவே பயமாக இருந்தது என்று கூறியுளளார்.லுதர் என்ற பிரிட்டிஷ் தொடரின் ரீமேக்கான இந்த
வெப்
தொடர்,தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், வங்காள மொழிகளில் தயாராகி வருகிறது.

இதில் அஜய் தேவ்கன், ராஷி கண்ணா, ஈஷா தியோல், அதுல் குல்கர்னி, அஸ்வினி கல்சேகர், அசிஷ் வித்யார்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை ராஷி கண்ணா. இவர் இந்தியில்
மெட்ராஸ் கபே
படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் திரைப்படத்தல் நடித்து தொடர் ஹிட் படங்களில் நடித்தார்.

உக்ரைன் நாட்டில் சிக்கிக் கொண்ட பிரியாமோகனன்…!போலியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…!

ஒரு சில படத்திலே டாப் நடிகை ரேஞ்சுக்கு பிரபலமான ராஷி கண்ணா தமிழில்
இமைக்கா நொடிகள்
படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். இங்கும் முதல் படத்திலே எக்கச்சக்க ரசிகர்களுக்கு பேவரைட் நடிகையாக பேசப்பட்டார்.ராஷிகண்ணா தற்போது, அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன்,
அரண்மனை
3 உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது கார்த்திக்குடன் சர்தார், படத்திலும் தனுஷூடன் திருச்சிற்றம்பலம் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் கவனத்தை செலுத்தி வரும் ராஷி கண்ணா, தற்போது
அஜய் தேவ்கனுடன்
ருத்ரா: த எட்ஜ் ஆப் டார்க்னஸ் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரின் மூலம் முதன்முறையாக ஓடிடியில் அறிமுகமாகிறார் ராஷிகண்ணா.

இந்த வெப் தொடரில் நடித்த அனுபம் குறித்து பேசிய ராஷி கண்ணா,
ருத்ரா த எட்ஜ் ஆப் டார்க்னஸ்
வெப்தொடர் ஒரு கிரைம் தொடராகும் அதில் அஜய் தேவ்கனுடன் இணைந்து நடித்துள்ளேன். முதல் முதலில் அஜய் தேவ்கன்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் பார்த்தேன், அதற்கு முன் அவரை எங்கேயும் பார்த்தது இல்லை. அவருடன் முதல் காட்சியில் நடிக்கவே பயமாக இருந்தது, பதற்றம் அடைந்து பல காட்சிகளில் சொதப்பி விட்டேன்.

நான் பதற்றப்படுகிறேன் என்பதை புரிந்து கொண்ட அஜன் தேவ்கன் என்னிடம், பதற்றம் வேண்டாம் கூல் என்றார். அவருடன் பழகிய பிறகுதான் தெரிந்தது அவர் உண்மையில் மிகவும் எளிமையான மனிதர், அவரிடம் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்றார். இந்த வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது என்றார்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.