ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான இளைஞர்.. ரம்மி விளையாட பணம் தராததால் எடுத்த விபரீத முடிவு..!

ஆன்லைனில் ரம்மி விளையாட பணம் தராததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு கீதா என்ற மனைவியும் விக்னேஷ், பிரகாஷ்  என்ற இரு மகன்களும் உள்ளனர். மாடசாமி அந்த பகுதியில் சென்ட்ரிங்க் வேலை செய்து வருகிறார். விக்னேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

பிரகாஷ் வேலை தேடி வந்துள்ளார். இதற்கிடையில் குடும்பத்தினரிடம் வேலைக்கு இண்டர்வியூக்கு செல்ல வேண்டும், கோசிங்க் கிளால் செல்ல வேண்டும் என அவ்வபோது பணம் வாங்கியுள்ளார். வீட்டில் இருந்த பணத்தையும் யாருக்கும் தெரியாமல் எடுத்துள்ளார்.

இந்நிலையில், சம்பவதன்று அவரது தாயிடம் அவசரமாக 10 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதனை கேட்ட அவரது தாய் எதற்கெடுத்தாலும் பணம் பணம் என கேட்கிறாய் அப்படி என்ன தான் செலவும் இனி பணம் தர முடியாது ஒழுங்காக வேலைக்கு செல்  என திட்டியுள்ளார்.

இதனால், மனஉளைச்சலுக்கு அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பிரகாஷ் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி அதற்கு அடிமையானது தெரியவந்தது. இதுவரைன் 3 லட்சம் ரூபாய் வரை இழந்தது தெரியவந்தது.

சம்பவதன்றும் அவர் ஆன்லைன் ரம்மி விளையாட பணம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவரது தாயார் மறுக்கவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.

104

044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)

022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.