‘‘அனைத்து துறைகளிலும் பெண்கள் தலைமையேற்று வருகின்றனர். வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட இந்தியாவின் அரிய கலைப் பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன’’ என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
வானொலியில் 86-வது ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றியதாவது:
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவிய போது, நமது விஞ்ஞானிகள் மிக வேகமாக அதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து வழங்கினர். அதற்காக அவர் களைப் பாராட்டுகிறேன். தற்போது நாடு முழுவதும் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்று தலைமையேற்கும் அளவுக்கு வளர்ந்துள்ளனர். நம் நாட்டின் அரியசிலைகள், பல கலைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. நமது கலைப் பொருட்கள் உணர்வில் கலந்தவை, இந்தியாவின் நம்பிக்கையாக விளங்குபவை. கடந்த 2013-ம்ஆண்டு வரை இதுபோன்ற இந்தியாவின் அரிய கலைப் பொருட்கள் 13 மட்டுமே மீட்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 7 ஆண்டு பாஜக ஆட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரிய சிலைகள், கலைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க பல நாடுகள் நமக்கு உதவி செய்துள்ளன.
இந்திய இசை ஒவ்வொரு வரையும் ஈர்த்துள்ளது. தான் சானியாவை சேர்ந்த கிலிபால் மற்றும் நீலிமா ஆகியோர் இந்திய பாடல்கள் பலவற்றுக்கு சரியாக உதட்டசைத்து, அதற்கேற்ப நடனமாடி சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானார் கள். நமது தேசிய கீதத்தைஅவர்கள் பாடியுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது குழந்தைகளும் ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரபலமான பாடல்களுக்கு நமது மொழிகளில் வீடியோக்களை உருவாக்கி வெளியிடலாம்.
கென்ய நாட்டின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவுடனான சந்திப்பின் போது, அவருடைய மகள் கண் பார்வை இழந்ததையும் அதை இந்திய ஆயுர்வேத மருத்துவர்கள் மீட்டுக் கொடுத் ததையும் கூறினார். அத்துடன் நமது ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அவர் நன்றி கூறினார்.
கென்யாவிலும் ஆயுர்வேதாமருத்துவத்தை பிரபலப்படுத்து வேன் என்று உறுதி அளித்தார். இந்தியாவில் ‘ஆயுஷ்’ அமைச்சகம் தனியாக அமைத்து அதை பலப்படுத்தி உள்ளது.
மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப் படுகிறது. பெண்களின் திறமை, துணிச்சலுக்குப் பல உதாரணங் கள் உள்ளன. நாளை (இன்று) தேசிய அறிவியல் தினம். சி.வி.ராமன் விளைவு தினமாகவும் அறியப்படுகிறது. நமது நாட் டின் அறிவியல் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் மரியாதை செலுத்துகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார். – பிடிஐ
80 சதவீதம் முத்தலாக் வழக்கு சரிவு
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் மேலும் கூறியதாவது: சமூக கொடுமையாக முத்தலாக் நடைமுறை இருந்து வந்தது. அதை தடுக்க கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் முத்தலாக் தொடர்பாக 80 சதவீத வழக்குகள் குறைந்துள்ளன. மேலும், பெண்கள் பேறுகால விடுப்பை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. திருமண விஷயத்தில் வயது உச்ச வரம்பை நிர்ணயிப்பதில் மகன்களுக்கும் மகள்களுக்கும் சம உரிமை அளிக்க இந்த அரசு முயற்சித்து வருகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.