இரவில் தூங்கும் முன்பு வெதுவெதுப்பான நீருடன் 2 கிராம்பு… இவ்வளவு நன்மை இருக்கு!

Medic benefits of cloves in tamil: இந்திய சமையலில் அதன் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக கிராம்பு உள்ளது. இது தவிர, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு மூலிகையாக, நமது உடலில் மேஜிக் செய்கிறது.

அறிவியல் ரீதியாக Syzygium aromaticum என அழைக்கப்படும் கிராம்பு, ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

மருத்துவ குணங்கள் கொண்ட கிராம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று வலி, பல் வலி, தொண்டை வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

தோற்றத்தில் சிறியதாகவும், சுவையில் சற்று கசப்பாகவும் இருக்கும் கிராம்பு, பல குணங்கள் நிறைந்தது.

கிராம்புகளில் யூஜெனால் என்ற தனிமம் காணப்படுவதால், மன அழுத்தம், வயிற்றுக் கோளாறுகள், பார்கின்சன் நோய், உடல்வலி போன்ற பிரச்சனைகள் சீராகிறது.

மேலும், கிராம்புகளில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்ற அத்தியாவசிய கூறுகள் உள்ளன.

பொதுவாக, கிராம்பு எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். ஆனால் படுக்கைக்கு முன் அதை உட்கொண்டால், அதன் பலன் இரட்டிப்பாகும் என சொல்லப்படுகிறது.

கிராம்புகளை எப்படி சாப்பிட வேண்டும்?

கிராம்பின் முழு நன்மையை பெற இரவில் படுக்கும் முன் 2 கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள். பின்னர், 1 கிளாஸ் ஹாட் வாட்டர் குடிக்க வேண்டும். இது முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

கிராம்பு மற்றும் ஹாட் வாட்டர் ஆரோக்கிய நன்மைகள்

  • கிராம்புகளை இரவில் உட்கொள்வது மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். கூடுதலாக, செரிமான அமைப்பு சரியாக வேலை செய்ய வைக்கிறது.
  • கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. மேலும், முகப்பருவுக்கு உதவும் ஒரு குறிப்பிட்ட வகை சாலிசிலேட்டும் உள்ளது.
  • பற்களில் புழுக்கள் இருந்தால், கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிட்டால், பற்களில் புழுக்கள் நீக்க உதவுகிறது. மேலும், பல்வலியைப் போக்கவும் உதவுகிறது.
  • கிராம்புகளை உட்கொள்வதால் வாயில் இருந்து துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. இதனுடன், நாக்கு மற்றும் தொண்டையின் மேல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.
  • இது தொண்டை புண் மற்றும் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.
  • கை, கால் நடுங்கும் பிரச்சனை இருந்தால், படுக்கைக்கு முன் 1-2 கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளலாம். சில நாட்களில் பலன் தெரியும்
  • நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருந்தால், தினமும் கிராம்புகளை உட்கொள்ளுங்கள்
  • சளி, இருமல், வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட கிராம்புகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.