உக்ரைனின் சின்னமாக செயின்ட் ஜாவ்லின் போற்றப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள வேளையில் தற்போது செயின்ட் ஜாவ்லின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்நிலையில், செயின்ட் ஜாவ்லின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜாவ்லின் எனப்படும் ஏவுகணையைச் செலுத்தும் கருவியுடன் ஒரு பெண் துறவி காணப்படுவதுதான் செயின்ட் ஜாவ்லின் புகைப்படமாகும். ரஷ்யா போர் தொடுத்திருக்கும் வேளையில், செயின்ட் ஜாவ்லின்தான் உக்ரைனின் மீட்பராகப் போற்றப்படுகிறார். அதனால்தான் இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
போருக்கு எதிராக உக்ரைனின் எதிர்ப்பைக் காட்டும் சின்னமாக செயின்ட் ஜாவ்லின் புகழப்படுகிறார். 1980-களில் ஜாவ்லின் எனப்படும் ஏவுகணையை ராணுவ வீரர்களின் தோள்களில் வைத்து செலுத்தும் கருவியை அமெ ரிக்க ராணுவம் உருவாக்கியது. 50 பவுண்டுகள் எடை கொண்ட இந்த ஜாவ்லினை, ஏவுகணையை செலுத்தும் வாகனமின்றி ராணுவ வீரர்களின் தோள்களில் இருந்தே இலக்கை நோக்கிச் செலுத்த முடியும்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்ய துருப்புகளைச் சமாளிக்க இந்த ஜாவ்லின் கருவியைக் கொண்டுதான் உக்ரைன் போர் வீரர்கள் சமாளித்து வருகின்றனர். ராணுவ வீரரின் தோளிலிருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதும் சுமார் 490 அடி வரை காற்றில் செல்லும் இந்த வகை ஏவுகணை பின்னர் கீழிறங்கி இலக்கைத் தாக்கி அழிக்கிறது.
இதனிடையே, செயின்ட் ஜாவ்லின் பெயரில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டு, செயின்ட் ஜாவ்லின் பெயர், புகைப்படம் பொறித்த ஜவுளிகள், கொடிகள், ஸ்டிக்கர்களை விற்பனை செய்து நிதி திரட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.