புடினுக்கு எதிராக உக்ரைனில் போரில் கலந்துகொள்ள பிரித்தானியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைன் சென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக போரில் கலந்துகொள்ள பிரித்தானியர்களுக்கு நேற்று இரவு அனுமதி வழங்கப்பட்டது.
போராட்டத்தில் சேர விரும்பும் தன்னார்வத் தொண்டர்களிடம் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் (Liz Truss) கூறியதாவது: “மக்கள் அந்தப் போராட்டத்தை ஆதரிக்க விரும்பினால், அதைச் செய்வதற்கு நான் அவர்களுக்கு ஆதரவளிப்பேன்” என்று கூறியுள்ளார்.
உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள லிஸ் ட்ரஸ், அவர் ரஷ்யாவின் படைகளைத் தடுக்க புதிதாக உருவாக்கப்பட்ட சர்வதேச படையணியில் சேருமாறு உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மக்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்கலாம் என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “உக்ரைன் மக்கள் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக போராடுகிறார்கள், உக்ரைனுக்காக மட்டுமல்ல, முழு ஐரோப்பாவுக்காகவும்.
நிச்சயமாக, மக்கள் அந்தப் போராட்டத்தை ஆதரிக்க விரும்பினால், அதைச் செய்வதற்கு நான் அவர்களுக்கு ஆதரவளிப்பேன்” என்றார்.