உக்ரைனுக்கு போர் ஆயுதங்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைனுக்கு போர் விமானங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு ரஷ்யாவுக்கு எதிரான போக்கு எனவும், ஆபத்தான செயல் எனவும் கூறியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவு உக்ரைன் – ரஷ்யா இடையேயான தற்போதைய நிலைமையை சீர்குலைக்க வழிவகுக்கும் என தெரிவித்துள்ளது.
மேற்கித்திய நாடுகளும் உக்ரைனுக்கான ஆயுத உதவியை முடுக்கிவிட்டிருக்கும் நிலையில், இவ்வாறு தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியமும், மற்ற நாடுகளும் எடுக்கும் என்பதை ரஷ்யா முன்கூட்டியே கணித்திருந்ததாகவும், தற்போது அது உண்மையாகி விட்டதாகவும் ரஷ்யா அதிபர் மாளிகை கூறியுள்ளது.