உக்ரைன்: கண்ணீருடன் இசைக்கப்பட்ட தேசிய கீதம்; மனதை உருக்கும் வீடியோ

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஏவுகணை மற்றும் ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டு பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர், மேலும் தாக்குதலில் இருந்து தப்ப, பதுங்கு குழிகளிலும், மெட்ரோ நிலையங்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இருப்பினும், ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலில், வெடிகுண்டு வெடிக்கும் சத்தத்திற்கு மத்தியில், பலர் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் உட்பட உக்ரைனின் பொதுமக்கள் சமூக ஊடகங்களில் தங்களுக்கு நேர்ந்த துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.  உக்ரேனிய பெண் ஒருவர் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில்  தனது சேதமடைந்த தனது வீட்டில் இருந்து உடைந்த கண்ணாடிகளை அகற்றி சுத்தம் செய்யும் போது அழுவதையும் தேசிய கீதத்தை பாடுவதையும் வீடியோவில் காணலாம். மனதை உருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

ஒக்ஸானா குலென்கோ என்ற பெண் வெடிகுண்டு வீசப்பட்டத்தில், குடியிருப்பில் இருந்த கண்ணாடிக் கதவுகள் உடைந்த நிலையில், கண்ணாடித் துண்டுகளை சுத்தம் செய்யும் போது உக்ரைனின் தேசிய கீதத்தைப் பாடுவதை வீடியோ காட்டுகிறது. ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் தலைநகர் கீவில் அவரது குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்தது.

ஒக்ஸானா கண்ணீரை அடக்கிக் கொண்டு இறுதியில், “உக்ரைன் வாழ்க”  ( Long Live Ukraine) என்று  உடைந்து போவதைக் காணலாம்,  ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்

மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள் 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.