உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம்



உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக உக்ரைன் சுற்றுலாப் பயணிகளினால் நாடு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறான சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பது குறித்த யோசனை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்பொழுது சுமார் 4000 உக்ரைன் சுற்றுலாப் பயணிகளும், 11500 ரஷ்யச் சுற்றுலாப் பயணிகளும் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்ப முடியாத உக்ரைன் பிரஜைகளுக்கு ஏதேனும் ஓர் வகையில் நிவாரணங்களை வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்ய உக்ரைன் மோதல்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கங்களைச் செலுத்தும் என நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.