உக்ரைன் ஜனாதிபதியின் உரையை மொழிபெயர்க்கும்போது உணர்ச்சி வசப்பட்டு அழுத ஜேர்மன் செய்தியாளர்


நேற்று உலகின் பல பகுதிகளில் தேவாலயங்களுக்குச் சென்றவர்கள், உக்ரைன் நாட்டில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கண்ணீருடன் பிரார்த்தனை செய்ததைக் குறித்த செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.

அந்த அளவுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர்.

இந்நிலையில், போர் குறித்த செய்திகளை வாசிக்கும் செய்தியாளர்கள், செய்திகளை மொழிபெயர்ப்போர், என பல தரப்பினரும் உக்ரைன் செய்திகளை வாசிக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு அழுவதைக் காட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவ்வகையில், உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky ரஷ்ய ஊடுருவல் தொடர்பில் ஆற்றிய உரை ஒன்றை மொழிபெயர்த்துக்கொண்டிருந்த ஜேர்மன் செய்தியாளர் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு அழுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அவரது பெயரோ, அல்லது முகமோ காட்டப்படாத நிலையில், அந்த ஜேர்மன் மொழிபெயர்ப்பாளர் Zelenskyயின் உரையை மொழிபெயர்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, Zelensky, ரஷ்யா தீமையின் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது, ஆகவே, அது ஐக்கிய நாடுகள் சபையில் தனது குரலை இழக்கவேண்டும் என்று கூற, அதுவரை அமைதியாக மொழிபெயர்த்துக்கொண்டிருந்த அந்த பெண், அடுத்து, உக்ரைனியர்களாகிய நாம் எதைக் காத்துக்கொள்ள போராடுகிறோம் என்பதை நிச்சயம் அறிந்துகொண்டுள்ளோம் என்று Zelensky கூற, அதை மொழிபெயர்க்க இயலாமல் அந்தப் பெண்ணின் குரல் கம்முகிறது.

வெடிகும் விம்மலை அடக்கிக்கொண்டு, மன்னியுங்கள் என்று அவர் கூறுவதைக் கேட்கலாம்.
 

அதேபோல, ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவரான Sky Sports News செய்தியாளரான Hayley McQueen (42) என்பவரும், உக்ரைனிலிருந்து குழந்தைகள் தப்பி வெளியேறும் காட்சிகளைக் கண்டு, நேரலையிலேயே கதறி அழுதுவிட்டிருக்கிறார்.

உக்ரைனியர்களுக்கு ஆதரவாக, அவர்களது நாட்டுக் கொடியிலுள்ள நீல நிறத்தில் சட்டையும், மஞ்சள் நிறத்தில் ஸ்கர்ட்டும் அணிந்து அவர் செய்தி வாசித்ததற்கு பலரும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.