ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலை விவகாரம்! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்



2000 ஆம் ஆண்டு இலங்கை ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

20 வருடங்களுக்கு முன்னர் இலங்கை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அண்மையில் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பிரித்தானியாவின் போர் குற்ற அதிகாரிகள் குழுவொன்றினால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நிமல்ராஜனின் கொலை தொடர்பிலான தகவல்களை அறிந்தவர்களிடம் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் உதவிகளை நாடியுள்ளனர்.

இது குறித்து விசாரணைகளை நடத்தும் அதிகாரியான கமாண்டர் ரிச்சர்ட் ஸ்மித் ”குறிப்பாக நிமலராஜனின் கொலை தொடர்பில் இன்னும் சிலருக்கு தகவல்கள் இருக்கலாம். நிமலராஜனின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக தகவல் அறிந்தவரிகள் முன்வந்து, தமக்கு அவ்வாறான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என ரிச்சரிட் ஸ்மித் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்களுக்கு World Express Services
தகவல்களை வழங்க [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.