ஒடிசா மாநிலத்தில் 5 கட்டமாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் 851 மாவட்ட ஊராட்சி பதவிகளுக்காக இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 78.68 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை நடைபெற்றது.
இதில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 786 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. பாரதிய ஜனதா 40 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
2017-ம் ஆண்டு நடந்த தேர்தலை விட தற்போது பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. பிஜூ ஜனதா தளத்துக்கு அதிக சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளது.