கீவ்: உக்ரைனில் போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட நிலையில், தலைநகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 5வது நாளாக தொடர்ந்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடுமையான தாக்குதலைகளை நடத்தி வருகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (பிப்.,28) நடைபெற உள்ள நிலையில் ரஷ்யாவின் தாக்குதல் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், போர் விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவ்வில் ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளது. அங்கு போர் விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட நிலையில், கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. கீவ்- வாசில்கோவ் சாலை வழியாக மக்கள் வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement