வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்க கடலின் தென் கிழக்குப் பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக் கடலின் தென் பகுதியில் உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெறும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த மூன்று நாட்களில் இலங்கை நோக்கி நகரக் கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.