HMD Global நிறுவனம், தனது புதிய மூன்று Nokia ஸ்மார்ட்போன்களை பார்சிலோனாவில் நடக்கும்
MWC 2022
நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி Nokia C21,
Nokia C21 Plus
, and
Nokia C2 2nd Edition
ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களும் குறைந்த விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை குறித்து எந்த தகவலையும் நோக்கியா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இந்த குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் சிறந்த அம்சங்களைக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அறிமுக நிகழ்வில், நோக்கியா வயர்லெஸ் ஹெட்போனையும் பயனர் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
Feature போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கு மாற நினைக்கும் பயனர்களுக்கு இந்த போன்கள் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். நோக்கியா C21 பிளஸ் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. அதே நேரத்தில் நோக்கியா C2 2nd Edition மற்றும் நோக்கியா C21 ஆகியவை ஒற்றை பின்புற கேமராவுடன் வருகின்றன.
அதென்ன 11ஜிபி Dynamic RAM… குறைந்த விலைக்கு Realme நார்சோ 50 அறிமுகம்!
நோக்கியா C2 2ஆவது பதிப்பு பாரம்பரிய பழைய திரை வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
நோக்கியா சி21
மற்றும் நோக்கியா சி21 பிளஸ் ஆகியவை வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. HMD குளோபல் இந்த மூன்று நோக்கியா சி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் நோக்கியா வயர்லெஸ் ஹெட்ஃபோன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
நோக்கியா சி சீரிஸ் விலை (Nokia C Series Price in India)
விலையைப் பொருத்தவரை, நோக்கியா C2 2ஆவது பதிப்பு சுமார் ரூ.6,700 இல் தொடங்குகிறது. நோக்கியா சி21 விலை ரூ.8,400 ஆகவும், நோக்கியா சி21 பிளஸ் விலை சுமார் ரூ.10,100ஆகவும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா வயர்லெஸ் ஹெட்ஃபோன்களின் விலை சுமார் ரூ.3,800ஆக நிர்ணயம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த போன்கள் அமெரிக்கா போன்ற ஐரோப்பிய சந்தைகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில், நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.
பணத்தை அள்ளித்தரும் பேஸ்புக்: TikTok-ஐ ஓரங்கட்டி பயனர்களை ஈர்த்த Meta நிறுவனம்!
இந்தியப் பயனர்களிடத்தில் நன்மதிப்பைப் பெற்றுள்ள Nokia பிராண்ட், இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் தனது போன் வரிசையை விரிவுபடுத்தி உள்ளது.
நோக்கியா C2 2nd Edition அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை நானோ சிம் ஆதரவு உள்ளது. நோக்கியா C2 2ஆவது பதிப்பு ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டு இயக்கப்படுகிறது. இதில் 5.7″ அங்குல FWVGA டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. குவாட்-கோர் மீடியாடெக் சிப்செட் உதவியுடன் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இது 1.5 GHz இல் Cortex-A53 இன் 4 கோர்களைக் கொண்டதாகும்.
Viral Video – 7ஆம் வகுப்பு மாணவனின் பிரமிக்க வைக்கும் கண்டுப்பிடிப்பு!
இதில் ஃபோகஸ் லென்ஸ், எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக எல்இடி பிளாஷ் கொண்ட 2 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் நிலையான 32ஜிபி ஸ்டோரேஜ் மெமரி உடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக சேமிப்பகத்தை 256ஜிபி வரை விரிவாக்கலாம். மேலும், 2400mAh திறன் கொண்ட Removable பேட்டரி கொண்டு சக்தியூட்டப்பட்டுள்ளது.
Nokia C21 மற்றும் Nokia C21 Plus சிறப்பம்சங்கள்
Nokia C21 ஆனது இரட்டை சிம் (நானோ) ஆதரவுடன் வருகிறது. இதில் ஆண்ட்ராய்டு 11 (Go Edition) இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. மேலும், 6.5″ அங்குல எச்டி+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. நோக்கியா சி21 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
இது நிலையான ஃபோகஸ் லென்ஸ் மற்றும் LED பிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை 3000mAh பேட்டரி சக்தியூட்டுகிறது.
வாடகை வீடு தேடுபவர்களா நீங்கள் – இத ட்ரை பண்ணுங்க… வீடு கண்பார்ம்!
நோக்கியா சி21 பிளஸ் ஸ்மார்ட்போனைப் பொருத்தவரை ஆண்ட்ராய்டு 11 (Go Edition) இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. மேலும், 6.5″ அங்குல எச்டி+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. நோக்கியா சி21 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
இது நிலையான போகஸ் லென்ஸ் மற்றும் LED பிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4000mAh பேட்டரி கொண்டு செயல்படுகிறது.
Read More:
Russia Ukraine News: உக்ரைன் பெண்களை Tinder-இல் டேட்டிங்கிற்கு அழைக்கும் ரஷ்ய Amazon தள்ளுபடி விற்பனை தினங்கள் – ஸ்மார்ட்போன்கள் மீது 20000 ரூபாய் வரை தள்ளுபடிஒன்பிளஸ் Vs ரியல்மி லேட்டஸ்ட் 5ஜி போன் ஒப்பீடுவாட்ஸ்அப் Tricks – வாட்ஸ்அப் டெலிட் மெசேஜ் பார்ப்பது எப்படி!