ரஷ்யா – உக்ரைன் போரானது தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய நாளில் போர் களத்தை மேலும் சூடுபிடிக்க வைக்கும் வகையில் பதிவான சம்பவங்கள் தொடர்பான தொகுப்பினை இங்கே பார்க்கலாம்,
- உக்ரைனியர்களுக்கு நேற்று “கடினமான நாள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரஷ்ய துருப்புக்கள் எல்லா திசைகளிலும் எறிகணை தாக்குதலை நடத்தியுள்ளன.
- ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்து வருகிறது.
- அத்துடன் ரஷ்ய விமானங்களுக்கு அதன் வான்வெளியை மூடுகிறது மற்றும் ரஷ்ய அரசு ஊடகங்களை தடை செய்கிறது.
- விளாடிமிர் புடின் நேட்டோ “ஆக்கிரமிப்புக்கு” பதிலளிக்கும் விதமாக ரஷ்யாவின் அணுசக்தி தடுப்பு “சிறப்பு எச்சரிக்கைக்கு”தயார் படுத்துமாறு உத்தரவிட்டார்.
- எனினும் இது, அவர் ஆயுதங்களைப் பயன்படுத்த விரும்புகிறார் என்று அர்த்தமல்ல என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
- ரஷ்ய தாக்குதலை முறியடித்து உக்ரைன் துருப்புக்கள் கார்கிவ் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று ஆளுநர் கூறியுள்ளார்.
- முழு படையெடுப்பில் 4,300 ரஷ்யர்கள் இறந்ததாக உக்ரைன் கூறுகிறது
எனினும் இது உறுதிப்படுதப்பிடவில்லை.
- ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்காக பெலாரஸ் எல்லைக்கு அருகில் உள்ள இடத்தில் கூடிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
முதலாம் இணைப்பு
உக்ரைன் போர் முனையில் உக்ரைன் ஆயுதப்படைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை “ஒரு
கடினமான நாளாக இருந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய துருப்புக்கள் “கிட்டத்தட்ட எல்லா திசைகளிலும் இருந்து எறிகனை
தாக்குதல்களை நடத்தியமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய அறிக்கைகளின் படி ரஷ்ய துருப்புக்கள் தெற்கு துறைமுகமான பெர்டியன்ஸ்கைக்
கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
எனினும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீதான ரஸ்ய தாக்குதலை
எதிர்த்து போராடியதாகக் உக்ரைன் அறிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்…
ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்துங்கள்! உக்ரைனுக்கு அதிவேக ஏவுகணைகளை அனுப்பும் அமெரிக்கா
“உக்ரைன் போர்க்களம் மேலும் தீவிரமாகிறது” உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் ஐரோப்பிய ஒன்றியம்
போர் களத்தில் படையினருக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை முதன்முறையாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ள ரஷ்யா