நடிகர்
தனுஷ்
துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நாயகனாகா அறிமுகமானார். பின்பு
செல்வராகவன்
இயக்கத்தில் தனுஷின் இரண்டாவது படமாக வெளியான
காதல் கொண்டேன்
படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தார் தனுஷ்.
பலகோடி ரசிகர்கள் தனுஷின் நடிப்பை பார்த்து வியந்து போனார்கள். அந்த நடிப்பில் வியந்தவர்களுள் ஒருவர் தான் ரஜினியின் மூத்த மகள்
ஐஸ்வர்யா
. தனுஷின் காதல் கொண்டேன் படத்தைப்பார்த்து தனுஷின் மீதே காதல் கொண்டார் ஐஸ்வர்யா. அதன் பின் இருவரும் 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.
யுவன் ஷங்கர் ராஜாவுடன் பிரச்சனையா ? .போனி கபூர் ஓபன் டாக் ..!
இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உண்டு. இந்நிலையில் கடந்த மாதம் இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியாகியது. முக்கியமாக
ரஜினி
இதனால் கடும் சோகத்திற்கும், கோபத்திற்கும் ஆளானார்.
தனுஷ்
என்னதான் பிரிவதாக இவர்கள் அறிவித்தாலும் இவர்களை மீண்டும் சேர்க்கும் பணியில் இவர்களது குடும்பத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் இவர்களை சேர்த்து வைப்பதில் மிக தீவிரமாக இருக்கின்றார்.
தனுஷ்
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷிற்கு இளைய சூப்பர்ஸ்டார் என்று பட்டம் வைப்பதாக சிலர் கூறிவந்தனர். ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த தனுஷ் தொடர்ந்து சில தயாரிப்பாளர்கள் வற்புறுத்தியதால் எந்த மாற்று கருத்தும் சொல்லாமல் இருந்தார்.எனவே விரைவில் படத்தில் இளைய சூப்பர்ஸ்டார் தனுஷ் என்று வரும் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.
இருப்பினும் தற்போது ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்ததால் கடும் கோபத்தில் இருக்கின்றார் ரஜினி. இந்நிலையில் தனுஷ் ஒருவேளை இளைய சூப்பர்ஸ்டார் டைட்டிலை வைக்கலாம் என்று எண்ணினாலும் சூப்பர்ஸ்டாரான ரஜினி அதற்கு சம்மதிப்பாரா எனபது சந்தேகம் என ரசிகர்கள் கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!