தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 14,912 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகன விபத்தில் இறப்பு 107% அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் புள்ளிவிவரபடி, 2021-ல் தமிழகத்தில் நடந்த 55713 வாகன விபத்துகள் நடந்துள்ளன. இதில் 14,912 தங்களின் உயிரை பலிகொடுத்துள்ளார். இதில்,
இருசக்கர வாகன விபத்துகளில் மட்டும் 6,223 பேர் பலியாகியுள்ளனர்.
லாரிகளால் ஏற்பட்ட விபத்துகளில் 2,467 பேர் பலியாகியுள்ளனர்.
கார்கள் விபத்துகளால் 2,467 பேர் பலியாகியுள்ளனர்.
வேன் மற்றம் சிறிய வகை சரக்கு வாகனங்களால் 1,140 பேர் பலியாகியுள்ளனர்.
மொத்தமாக 55713 வாகன விபத்துகளில் 14,912 தங்களின் உயிரை பலிகொடுத்துள்ளார். இது கடந்த ஆண்டை விட 6852 பேர்அதிகமாகும்.
அதிகபட்சமாக கடந்த 2016-ம் ஆண்டில் 17218 பலி எண்ணிக்கை இருந்தது. அது, படிப்படியாக உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்து 2020-ல் 8060 ஆக குறைந்து இருந்த நிலையில், மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் சாலை விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.