பொதுவாக தூக்கமின்மை சிக்கலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சினை போன்றவையும் தூக்க சுழற்சி முறையை சிதைக்கக்கூடியவை.
அதிலும் தூக்கம் கெடுவதால் பல நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
உடல் பருமன், இதய நோய்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படவும் தூக்கமின்மை காரணியாக மாறுகிறது.
இதனை எளியமுறையில் நீக்க முந்திரி பால் உதவுகின்றது.
முந்திரி பாலை எப்படி தயாரிப்பது மற்றும் அதை எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
- ஒரு கைப்பிடி அளவு முந்திரியை எடுத்து, ஒரு கிளாஸ் பாலில் 4-5 மணி நேரம் ஊற வைக்கவும். முந்திரி நன்கு ஊறியதும், பாலில் இருந்து எடுத்து அதை அரைத்து வைக்கவும். அரைப்பதற்கு பாலை சேர்த்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட் நன்கு மைய அரைபட்டிருக்க வேண்டும்.
- நன்றாக நைஸாக அரைபட்ட முந்திரி விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைக்கவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து 5-10 நிமிடங்கள்அடுப்பில் வைக்கவும்.
- தேவைக்கேற்ப இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, பாலில் சுவைக்கேற்ப சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, மேலும் 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.
- இந்த முந்திரிப்பாலை சூடாகவோ, ஆற வைத்தோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளுமையாகவோ குடிக்கலாம்.
- தூக்கம் தொடர்பான துக்கம் தீர, தினமும் இரவில் தூங்கும் முன் இந்த முந்திரிப்பாலை அருந்துவது நல்லது.
குறிப்பு
- சர்க்கரை சேர்க்க விரும்பவில்லை என்றால், தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
- பொதுவாக முந்திரியை அளவாக உட்கொள்வது நல்லது. ஆனால், ஒவ்வாமை அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முந்திரிப்பாலை பருக வேண்டாம்.