புதுடில்லி: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மாணவர்களை மத்திய அரசு எப்படி வெளியேற்ற போகிறது என்ற திட்டத்தை உடனடியாக பகிர வேண்டும் எனவும், நம் சொந்த மக்களை நாமே கைவிடக் கூடாது என்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனை விட்டு அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்தியர்கள், உக்ரைனை விட்டு வெளியேறுவதற்காக போலந்து எல்லையை கடக்க முயன்ற போது, உக்ரைன் பாதுகாப்பு படையினர் தாக்கியதாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவிக்கையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் அவர்களை கண்டு துன்புறும் குடும்பத்தாரையும் நினைக்கையில் மனம் வருந்துகிறேன். எந்த பெற்றோருக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது. மத்திய அரசு மாணவர்களை எப்படி வெளியேற்ற போகிறது என்ற திட்டத்தை உடனடியாக மாணவர்களுடனும், அவர்களின் குடும்பத்தாருடனும் பகிர வேண்டும். நம் சொந்த மக்களை நாமே கைவிடக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement