தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் பங்கேற்போர் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் தங்களின் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
தமிழக அரசுப் பணிகளுக்கு தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் நியமணம் செய்யப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு உரிய தகுதிகளுடன் இருப்பவர்கள் மட்டுமே பணி நியமணம் பெற முடியும். தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஒருமுறை பதிவு செய்யப்பட்ட நிரந்தர கணக்கு வைத்திருப்பது கட்டாயம்.
தேர்வர்கள் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்கு எண்ணுடன் தங்களுடைய ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 23 ஆம் தேதி வரை இருப்பதால் அதுவரை ஆதார் எண்ணை ஒருமுறை பதிவு செய்த நிரந்தர கணக்குடன் இணைப்பதற்காக அவகாசம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இணைத்தவர்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.