இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, அதன்பின்னர் சிறிது கால ஓய்விற்கு பின்னர் காதலர் தினத்தை முன்னிட்டு ரொமாண்டிக் பாடல் ஒன்றை தயாரிக்கும் பணிகளில் இறங்கினார் ஐஸ்வர்யா.
இந்த பாடலின் புரோமோ வீடியோ கடந்த காதலர் தினத்தன்று வெளியானது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள ‘
முசாபிர்
‘ என்ற பாடல் பல மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த பாடலை தெலுங்கில் சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும், தமிழில் அனிருத்தும் பாடுகின்றனர். இதன் முழு வீடியோ விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
‘ஏகே 61’ படத்தில் தரமான சம்பவம் செய்ய போகும் அஜித்: வெளியான மாஸ் தகவல்..!
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ‘முசாபிர்’ பாடலின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஐஸ்வர்யா.இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது நீண்ட நாள் கழித்து கேமராவை ஹேண்டில் செய்வது குறித்து உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
Aishwarya Insta Story
தினமும் தனது ‘முசாபிர்’ பாடல் குறித்த அப்டேட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று படப்பிடிப்பில் மற்றவர்களுக்கு மைக்கில் இன்ஸ்ட்ரெக்ஷன் கொடுப்பதை போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு நிறுத்து, நான் சொல்றேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா. இவரின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடலின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்து கொண்டுடிருக்கின்றனர்.
சர்ச்சையில் சிக்கினாலும் அசராத ஐஸ்வர்யா!