புதுடெல்லி:
அத்தியாவசிய உணவு பொருட்கள் பொதுமக்களுக்கு தடையில்லாமல் கிடைக்க, அதன் வரத்து அதிகரிப்பதையும், விலைகளை நிலைப்படுத்தவும் மத்திய அரசு பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அத்தியாவசியப் உணவுப் பொருட்கள் சட்டத்தின் கீழ், விலைகளைக் கண்காணிக்கும்படியும், மில் உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இருப்புகளை தெரிவிப்பதை உறுதி செய்யுமாறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடந்த மே மாதத்தில் அறிவுறுத்தி இருந்தது.
துவரை, உளுந்து மற்றும் பாசி பருப்பு ஆகியவற்றை கடந்தாண்டு மே 15ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதிவரை தடையின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது.
இந்த உத்தரவு பின்னர் நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துவரை, உளுந்து, பாசிப் பருப்பு ஆகியவற்றின் வரத்து அதிகரித்து, விலை குறைந்துள்ளது.
இந்திய அளவில் பாசி பருப்பின் சராசரி சில்லரை விலை தற்போது 3.86 சதவீதம் குறைந்துள்ளதாக நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.