பஹ்ரைனில் ‛வலிமை' கொண்டாட்டம்

வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள வலிமை படம் உலகம் முழுக்க கடந்த வியாழன் அன்று வெளியானது. பஹ்ரைனில் வெளியான இந்த படத்திற்கு அங்கு உள்ள அஜித் நற்பணி மன்றம் சார்பாக கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மணாமா பகுதியில் அமைந்துள்ள அல் ஹம்ரா திரையரிங்கில் பேனர்கள் வைத்தும், கேக் வெட்டியும், இனிப்புகளை வழங்கியும், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்குள்ள அஜித் ரசிகர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பஞ்சு ராஜ்குமார், துணை ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ் பன்னீர்செல்வம் மற்றும் ஜெயேந்திரன் கோபிநாத் அவர்களது தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் Media Friends club – பஹ்ரைன் நிர்வாகிகள் நடிகர் கார்த்திக் ராஜ், இயக்குனர் ப்ரஷாப் மேனன் மற்றும் விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் மெல்வின், நஜிம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

திரையரங்கை சுற்றிலும் ஏராளமான ரசிகர்கள் கூடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்வில் உள்நாட்டு கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.