பா.ம.க.வை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும் என்று, பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் பேசியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்.
கட்சி வளர்ச்சிப்பணிகள் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் நடத்தி வரும் தொடர் ஆலோசனைகளில் இது மூன்றாவது கலந்தாய்வுக் கூட்டம் ஆகும். தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, பொருளாளர் திலகபாமா, இணைப் பொதுச் செயலாளர் இசக்கி படையாட்சி, அமைப்பு செயலாளர் செல்வக்குமார், திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் கணேஷ்குமார், வேலாயுதம், பாண்டியன், பக்தவச்சலம் மாவட்ட தலைவர்கள் சீனுவாசன், ஏழுமலை, பரமசிவம், திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஏ.பி.சிவா, பாலு, வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் கீ.லோ. இளவழகன், குமார், மாவட்ட தலைவர் வெங்கடேசன், இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் எம்.கே. முரளி, கே. சரவணன், மாவட்ட தலைவர்கள் அ.ம. கிருஷ்ணன், ஆறுமுகம் முதலியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளின் உழைப்பு, தியாகம், அர்ப்பணிப்பு உணர்வு உள்ளிட்டவற்றை பாராட்டிய மருத்துவர் அய்யா அவர்கள், ”அனைத்து நிலைகளிலும் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும். அதற்காக மக்களை சந்திக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
நாளை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார்கள்.