பிரதமரின் அலுவலகம் திறக்கப்படுவதை நிறுத்திய அமைச்சர்



பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருணாகல் மாவட்ட இணைப்பு அலுவலகம் நேற்று முற்பகல் திறக்கப்படவிருந்த நிலையில், அலுவலகத்தின் திறப்பு விழாவை திடீரென மார்ச் 5 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக தெரியவருகிறது.

குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர், அலுவலகம் திறக்கப்படுவதை தாமதிக்குமாறு விடுத்த கோரிக்கையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

குருணாகல் – புத்தளம் வீதியில் யந்தம்பலாவ பகுதியில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதுடன் பிரதமரின் சகல ஒருங்கிணைப்பு பணிகளும் அவரது தனிப்பட்ட செயலாளரான இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் தனிப்பட்ட செயலாளரான ரோஹித்த ராஜபக்ச தலைமையில் நேற்றைய தினம் அலுவலகம் திறக்கப்படவிருந்தது.

அலுவலகம் அமைந்துள்ள கட்டடம் கடந்த பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசார அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.