பெரும் ஏமாற்றம்.. இறங்கிய வேகத்தில் ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை.. இனி குறையுமா?

தங்கம் விலையானது கடந்த அமர்வில் உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் மீண்டும் பலமான ஏற்றத்தினை கண்டு வருகின்றது. சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது.

இதன் காரணமாக தங்க ஆபரண விலையும் உச்சம் தொட்டுள்ளது. இந்தளவுக்கு ஏற்றம் கண்டு வருகின்றதே? இனி குறையவே குறையாதா? இனி என்ன தான் நடக்கும்? நிபுணர்களின் கணிப்பு தான் என்ன? முக்கிய காரணிகள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

இன்னும் போர் பதற்றமானது குறைந்தபடாக இல்லை. மாறாக 5வது நாளாகக் இன்றும் உக்ரைனின் தலை நகரில் கடுமையான தாக்குதல் இருந்து வருவதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொடத் தொடங்கியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா பேச்சு வார்த்தை கைகொடுக்குமா.. 700 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்!

அணுஆயுத தாக்குதல் திட்டமா?

அணுஆயுத தாக்குதல் திட்டமா?

பெலாரஸில் இருந்து ரஷ்யா அணு ஆயுத தாக்குதலை உக்ரைன் மீது நடத்த திட்டமிட்டிருப்பதாக பிரான்ஸ் எச்சரித்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பெலாரஸில் அணு ஆயுதத்தினை பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும், இது மனிதாபிமானமற்ற செயல் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து உக்ரைன் தலை நகரை கைபற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டும் வருகின்றது.

பேச்சு வார்த்தை

பேச்சு வார்த்தை

இப்படி பல நெருக்கடியான நிலைக்கு மத்தியில் ரஷ்யா – உக்ரைனுக்கு இடையேயானது பதற்றத்தில், பெலாரஸில் இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் ஒரு சுமூக தீர்வு எட்டப்படுமா? இதன் மூலம் போர் பதற்றம் குறையுமா? ரஷ்ய படைகள் உக்ரைனில் இருந்து வெளியேறுமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

ஃபெடரல் வங்கி கூட்டம்
 

ஃபெடரல் வங்கி கூட்டம்

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டம் வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் பற்றிய முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வட்டி விகிதம் எதிர்பார்ப்பினை போல் அதிகரிக்கப்பட்டால், இது டாலரின் மதிப்பினை ஊக்கப்படுத்தலாம். இது தங்கம் விலையில் எதிரொலிக்கலாம்.

ஓபெக் நாடுகளின் முடிவு என்ன?

ஓபெக் நாடுகளின் முடிவு என்ன?

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் ஏற்கனவே கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு திரும்பியுள்ளது. இந்த நிலையில் இது இன்று நடக்கவிருக்கும் கூட்டத்தினை பொறுத்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஓபெக் நாடுகளின் கூட்டம் இந்த வாரத்தில் நடைபெற வுள்ளது. இதில் ஏதேனும் முக்கிய முடிவு எட்டப்படுமா? உற்பத்தி அதிகரிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

பணவீக்க அச்சம்

பணவீக்க அச்சம்

எப்படியிருப்பினும் தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க அமெரிக்க அரசு அதிரடியான நடவடிக்கையினை எடுக்கலாம். இதற்கிடையில் அமெரிக்காவின் பண்ணை அல்லாத வேலை வாய்ப்பு குறித்த தரவு வெளியாகவுள்ளது. ஆக இதுவும் தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 21.55 டாலர்கள் அதிகரித்து, 1909.30 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் குறைந்து பின்னர் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக குறையும் போது வாங்கி வைக்கலாம்.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் 1.72% அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு கிட்டதட்ட 2% அதிகரித்து, 24.410 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது.கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 804 ரூபாய் அதிகரித்து, 51,025 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. எனினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 1097 ரூபாய் அதிகரித்து, 65,120 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலையானது இன்று பலத்த ஏற்றத்தினை கண்டே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 76 ரூபாய் அதிகரித்து, 4,813 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 608 ரூபாய் அதிகரித்து, 38,504 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 81 ரூபாய் அதிகரித்து, 5,250 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 648 ரூபாய் அதிகரித்து, 42000 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையை போல, ஆபரண வெள்ளி விலையும் பலத்த ஏற்றத்தினை கண்டுள்ளது. இது தற்போது கிராமுக்கு 1.10 ரூபாய் அதிகரித்து, 70.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 701 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1100 ரூபாய் அதிகரித்து, 70,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது தொடர்ந்து அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. எனினும் இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 28th February 2022: gold prices remain choppy amid russia- ukraine tension

gold price on 28th February 2022: gold prices remain choppy amid russia- ukraine tension/பெரும் ஏமாற்றம்.. இறங்கிய வேகத்தில் ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை.. இனி குறையுமா?

Story first published: Monday, February 28, 2022, 11:41 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.